Saturday 24 December 2016

ஆண் பெண் வசியம்



சில  குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.

       விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...

         இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காத
லி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..

         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.

         வெள்ளிக்கிழமை தினம் தன் நட்சத்திர பட்சி ஆட்சி செய்யும் வேளையில் மிளகு சாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து கிழக்கே போகும் வேரை எடுத்து வசிய மந்திரம் (யநமசிவ) என்று 1008 உரு சொல்லி தாயத்தில் அடைத்துக் கட்டிக்கொண்டால் பார்க்கும் அனைத்து பெண்களும் வசியமாவார்கள்.

 எந்த வசிய முறையையும் குரு வழிகாட்டுதலுடன் செய்ய உடனே பலன் தரும்..

1 comment:

  1. ஏற்கனவே உள்ள வசியமை க்கு எப்படி ஒரு கொடுக்கிறது அது பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அண்ணா உங்க பதிவு ரொம்ப அருமையா இருக்கு நல்ல விஷயங்களை வந்து தெரிஞ்சுக்க முடியுது ரொம்ப நன்றி 🙏🌺🌺🌺🙏

    ReplyDelete