Saturday 28 May 2016

பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்


ஒரு தட்டில் விபூதி பரப்பி அதன் மீது மேற்கண்ட சக்கரத்தை எழுத வேண்டும். இதற்கு அன்னம் சுண்டல் தேங்காய் பழம் கற்பூரம் சாம்பிராணிப் புகையுடன் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் விட்டு எரியவிட்டு தெற்கு முகமாய் ஒரு கால் மடக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

மந்திரம், :
ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும்
கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா

என 108 முறை ஜெபித்து விபூதியை பேய் பிடித்தவர்க்கு மேல் ஊத பேய் ஆடும். வாய் திறந்து பேசும் கருப்புத் துணி, கோழி முட்டை, எழுமிச்சம் பழம் காவு கொடுத்து பேயை விரட்ட வேண்டும். நீரில் மந்தரித்து முகத்தில் அடிக்கலாம். பிரம்பில் மந்தரித்து தலைமுதல் கால் வரைத் தடவலாம். யந்திரத்தை தகட்டில் எழுதி குளிசமாக் கட்டலாம். 

Friday 20 May 2016

தேவதா வசியமும் அதற்குண்டான மூலிகை வேர்களும்


தேவதை மூலிகை வேர் பிடுங்கும் கிழமை 
விநாயகர்                                              வில்வம்                                                 வெள்ளிகிழமை                             
சுப்பிரமணியர் மயில்கொன்றை செவ்வாய்கிழமை 
மும்மூர்த்திகள் அரசுஞாயிறு கிழமை 
தேவர்கள் கஸ்தூரி மஞ்சள் செவ்வாய்கிழமை 
அஷ்டதிக்கு பாலகர்கள் மஞ்சள் வெள்ளிகிழமை 
சூரியன் முருங்கை செவ்வாய்கிழமை
சந்திரன்  சிறிய நங்கைதிங்கள் கிழமை 
செவ்வாய் சிவனார் வேம்பு செவ்வாய்கிழமை
புதன் அம்மான் பச்சரிசி ஞாயிறுகிழமை 
வியாழன் துளசி வியாழன் கிழமை 
சுக்கிரன் பூண்டு வெள்ளிகிழமை
சனி அரளி ஞாயிறு கிழமை 
ராகு காஞ்சிரை ஞாயிறு கிழமை 
கேது வேம்பு வெள்ளிகிழமை
காளி வெள்ளை குன்றி மணி வெள்ளிகிழமை
துர்க்கை ஊமத்தன் செவ்வாய்கிழமை
ருத்திரி வேளை வெள்ளிகிழமை
மயான ருத்திரி நாய்வேளை ஞாயிறு கிழமை 
சாமுண்டீஸ்வரி உத்தாமணி கிரகணம் 
சரஸ்வதி செண்பகம் சனிக்கிழமை 
சாமளா மல்லிகை செவ்வாய்கிழமை
ஜாலக்காள் தும்பை ஞாயிறு கிழமை 
மலையாள பகவதி பூண்டு வியாழக்கிழமை 
தூமாதேவி பிரமதண்டு ஞாயிறு கிழமை 
பத்ரகாளி எட்டி ஞாயிறு கிழமை 
வாலை கொத்தான்  செவ்வாய்கிழமை
வராகி மஞ்சள் திங்கள்கிழமை  
வைரவர் வில்வம் வெள்ளிகிழமை 
அஞ்சனாதேவி கொன்றை ஞாயிறு கிழமை
ஆஞ்சநேயர் சரங்கோன்றை ஞாயிறு கிழமை
வீரபத்திரர் வில்வம் வியாழக்கிழமை 
வீரமாகாளி அரசு ஞாயிறு கிழமை
குரளி ஊமத்தன் ஞாயிறு கிழமை
மலக்குட்டி எட்டி திங்கள்கிழமை  
லாடன் வேளை வெள்ளிகிழமை
ஸ்ரீ லட்சுமி மஞ்சள் வெள்ளிகிழமை
எக்கலா தேவி வேலிப்பருத்தி வெள்ளிகிழமை
குட்டிசாத்தான் காஞ்சொரி ஞாயிறு கிழமை
வேதாளம் கருங்காலி கிரகணம் 

Wednesday 18 May 2016

நல்ல பலன் அளிக்கும் கணபதி மந்திரங்கள்


1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா

2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே
வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி
தேஹி ஸ்வாஹா

3. வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே
நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து
லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே
சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

4. கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்

5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ

வித்யாம் தேஹி ஸ்வாஹா

Sunday 15 May 2016

சர்வ தோஷ நிவாரணமந்திரம்

‘ஓம் நமோ பகவதே விஷ்ணவே 

ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே 

சர்வா பீஷ்ட பலப்ரதாய 

சகல  துரித நிவாரினே 

சாளக்ராமாய  ஸ்வாஹா’ 



இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச் செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

Thursday 12 May 2016

சொப்பன வராகி தியானம்


சொப்பன வராகி மூல மந்திரம் 

ஓம் க்லீம் உன்மத்த பைரவி வராகி சொப்னம் ட ட ஹூம்பட் சிவா .  

பூஜை முறை :

இந்த மந்திரத்தை வளர்பிறை வெள்ளிகிழமை துவங்கலாம் 22000 முறை ஜெபிக்க வேண்டும் .
இதனால் என்ன கேட்டாலும் அதற்குரிய பதில் இந்த தேவதை கனவில் வந்து சொல்லும் ஒரு சிலர் கனவில் சென்று நமக்கு சாதகமாக பல காரியங்கள் நிகழ்த்தி காட்டும் 

Thursday 5 May 2016

ரகசிய ஜன வசியம்


வசியத்தில் ஜன வசியம், 
தன வசியம்,
சத்ரு வசியம்,
ஸ்த்ரீ (பெண்) வசியம், 
புருஷ (ஆண்) வசியம், 
மிருக வசியம், 
தேவவசியம்,
லோக வசியம்,
ராஜ வசியம்,
மூலிகையினால் வசியம், 
யந்திரத்தினால் வசியம் 
என பல உள்ளது. இங்கே கொடுக்கபட்டுள்ளது பொதுவான ஆனால் சக்தி வாய்ந்த ஒன்றாகும்.ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றும் ஆகும்.

கோரோசனையுடன், மச்ச கல், சிறுதேன் என அழைக்கப்படும் புற்றுதேனையும் சேர்த்து இழைத்து நெற்றியிலோ, உள்ளங்கால்களிலோ தடவிக்கொண்டு செல்ல, நமது எதிரிகள் முதற் கொண்டு சகலரும் வசியமாவார்கள். இது அனுபவத்தில் கைகண்ட முறையாகும். இதற்கு அளவு முறை ஏதும் இல்லை.அவரவர் தேவைக்கேற்ப்ப செய்து கொள்ளலாம்.

கோரோசனையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.மச்ச கல் என்பது கடலில் வாழும் சுறா மீன் வகைகளில் மிக அபூர்வமாக அதன் தலை பகுதியில் கிடைக்க கூடிய ஒரு கல் ஆகும். புற்று தேன்-இது மண் குடிசை கரையான் புற்று போன்ற இடங்களில் சிறிய கொசுவை போல உள்ள தேனீக்களால் கட்டப்படும் கூட்டில் கிடைக்கும் தேன். இந்த கூடுகளில் அதிகபட்சம் 50 முதல் 100 மில்லி வரை தான் தேன் இருக்கும். கொசுததேன் எனவும் இதை கூறுகிறார்கள். (எங்கள் தேவைக்கு மலை மற்றும் வன பகுதிகளில் வாழும் மக்களின் மூலம் பெறுகிறோம்.

Tuesday 3 May 2016

காத்யாயணி மந்திரம்


மூலமந்திரம் 

ஓம் நமோ பகவதி ஸ்ரீம் தும் ஸம் காத்யாயனி 
மஹாமாயே திரிபுரி தமனி கால கண்டி 
ஐம் க்லீம் ஸௌம் ஹ்ரீம் ஹீம் பட் ஸ்வாஹா 

பூஜை முறை  

இந்த எந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து அபிசேகம் செய்து சந்தனம் குங்குமம் புனுகு தடவி பீடத்தில் வைத்து அதன் முன் வாழைஇலை போட்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, அவல், கடலை, சுண்டல், வடை, பால், பொங்கல் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கிழக்கு முகமாய் அமர்ந்து  1008 உரு வீதம் 11 தினம் ஜெபிக்க சித்தியாகும்

விவாகம் ஆஹாத பெண்களுக்கு இந்த தகட்டை தாய்த்தில் அடைத்து பூசித்துகட்ட விவாகம் சீக்கிரம் முடியும் சகல பேய்பில்லி சூனியம் பைத்தியம் இவைகள் விலகும் சர்வ ஸௌபாக்கியம் உண்டாகும் செல்வம் பெருகி லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்