Saturday, 17 December 2016

செய்வினை நீக்க பரிகாரம்

http://malayalamantra.blogspot.in/


செய்வினை ஏவல் பில்லி சூன்யம்  நீக்கும் எளிய பரிகாரமுறை இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்க அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…! பொருட்கள் அளவு:

1. வெண்கடுகு - 250 கிராம்
2. நாய்க்கடுகு - 250 கிராம்
3. மருதாணி விதை - 250 கிராம்
4. சாம்பிராணி - 250 கிராம்
5. அருகம்புல் பொடி - 50 கிராம்
6. வில்வ இலை பொடி - 50 கிராம்
7. வேப்ப இலை பொடி - 50 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மயில் இறகு மகத்தான பரிகாரங்கள்



மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும்.

மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.

ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சனி தோஷம்
மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வாஸ்து தோஷம்
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

அலுமாரிநகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.

எதிர்மறை ஆற்றல்கள்
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

அலுவலக இடம்
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

பூச்சிகள் வராது
மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

அன்யோன்யம் மற்றும் புரிதல்
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

சகல காரிய சித்திக்கு கணபதி யந்திரம்

http://malayalamantra.blogspot.in/


காரீயத் தகடு அல்லது செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டு தேங்காய்,பழம்,இனிப்பு,அவல் பொரி கடலை,சுண்டல்,வெற்றிலை பாக்கு,முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும்.பிறகு..

 "ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா" 

என்று 1008 உரு வீதம் 12 நாட்கள் செபிக்க சித்திக்கும்.தகட்டினை சுருட்டி குளிசமாடி கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்,சகல காரியங்களும் சித்தியாகும். பூஜிக்கப்பட்ட கணபதி யந்திரம் தேவைக்கு தொடர்பு கொள்க:

வியாபாரத்தில் அமோக வெற்றி பெற

http://malayalamantra.blogspot.in/


செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமான வெற்றிகளை குவிக்க இங்கு சொல்லப்படும் பரிகாரங்களை தினசரி நீங்களே செய்து வந்தால் கடன் இல்லாமல் நிச்சயமாக செல்வ செழிப்போடு வாழலாம் .

தொழில் வியாபாரம் ஸ்தாபனங்களில் வேலையை ஆரம்பிக்கும் முன்,5 வெற்றிலை,4 கொட்டாம்பாக்கு இவைகளை உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு,"குருவடி சரணம்,திருவடி சரணம்" என்று 9 முற கூறி சுவாமி படத்தின் முன்பு வைத்து விட்டு வேலையை தொடங்குங்கள் தொழில் வியாபாரம் அனைத்தும் சிறக்கும்,லாபம் உண்டாகும்.இது கைகண்ட அனுபவ முறை.

தொழில் வியாபார வசிய யந்திரம்,வசிய மை,தாயத்து தேவைக்கு தொடர்பு கொள்க.

சகல தோஷங்களும் நோய்களும் நீங்க .



சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்:

"ஓம் அங் நங் கிலி கிலி சுவாஹா" 

என்று 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.

பின்னர் வலது கையில் அல்லது தாம்பூலத்தில் விபூதி பரப்பி அதில் "ஓம்" என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து அந்த விபூதியை நோய்வாய்ப்பட்டவருக்கு கொடுத்து அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள சகல நோய்களும் நீங்கி விடும்.மற்றவர்களும் பூசி வர சகல தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.

தடையில்லா செல்வ வளம் பெற தினசரி பரிகாரம்

http://malayalamantra.blogspot.in/

தொழிலதிபர்கள் ,கடை வைத்திருப்பவர்கள்  வியாபாரம்  செய்பவர்கள்  மற்றும் வீடுகளில் ,தொழில் ஸ்தாபனங்களில் தினந்தோறும்இ குறைவில்லா செல்வம் கொழிக்க  ஸ்தாபனத்தில் வடகிழக்கு பகுதியில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் சிறிது பச்சைக்கற்பூரம், கையளவு துளசி இலைகளை போட்டு மூடி வைத்துவிடவும்.இதை 3 நாட்கள் முடிந்ததும் இலைகளை எடுத்து களைந்து விட்டு அந்த நீரை வீடு,இடம்,தொழில் ஸ்தாபனங்களில் தெளித்து வர அந்த இடம் செல்வ வசியத்திற்குட்பட ஆரம்பிக்கும்..

சர்வ வசிய மை தயாரித்தல்




வெண் குன்றிமணி 
வெள்ளைச் சாரணை 
வெள்ளெருக்கு 
வெள்ளை விஷ்ணுகிராந்தி

இவைகளை முறைப்படி காப்பு கட்டி, சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுத்து, உலர்த்தி தீயில் கருக்கி பத்திரப்படுத்தவும்.

கருங்குருவி பிச்சு கண் 
கரிச்சான் பிச்சு கண் 
கரும்பூனை பிச்சு கண் 
கருநாய் பிச்சு கண்

இவைகளை எடுத்து உலர்த்தி வைத்துக் கொண்டு ..

புனுகு,
கோரோசனம்,
பச்சைக்கற்பூரம்,
குங்குமப்பூ, 
கஸ்தூரி 

இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை எடுத்து சேர்த்து, வல்லூறு தைலம் விட்டு இரண்டு சாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரப்படுத்தவும்.

இதற்கு பூஜை மந்திரம்:

"ஓம் ஹ்ரீம் நமோ பகவதி உச்சிஸ்ட சண்டாளினி 
சர்வலோகம் தஸமானய சுவாக"

இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 11 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும் .இதை தேவை படும் பொழுது நெற்றியில் இட்டுக்கொள்ள சகல வசிய ம் ஆண்எ ,பெண் ,ஜன, தன, சொர்ண வசியம்  முதல் தாவரம், மனிதர்கள், மிருகம், என அனைத்தும் வசியமாகும்..

அஞ்சன மை தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள்


அஞ்சன மை இடுவது அதிகமாக  பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு. பெண்களும், ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம். அதன் மூலம் பலநோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளவேண்டும்.

அஞ்சன மை  தயாரிக்கும் முறை

வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச்சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச்சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி, மீண்டும் தோய்த்துமீண்டும் உலர்த்தி, பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ளவேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில், மேற்படி கரிசலாங்கண்ணிச்சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சட்டியை அந்தவிளக்கின்மீது காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறுபார்த்துக் கொள்வதுஅவசியம்.மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியைவழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்துவெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள்அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒருகாதந்தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம்இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.

வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல்இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் இல்லை.கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல்,மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.

  • வசிய அஞ்சனம் மை - இதனை திலகமிட யாரும் வசியமாவார்கள்.
  • குங்குமப்பூ அஞ்சனம் மை - பெண் தேவதைகள், சக்திகள் வசியமாவார்கள்
  • சத்ரு சம்ஹார அஞ்சனம் மை - எதிரிகள் வசியமாவார்கள், நோய் வராது 
  • பிற மத அஞ்சனம் மை - எந்த பிரார்த்தனையும் கைகூடும் 
  • யாக அஞ்சனம் மை - ஞானம், யோகம் நிலை கிடைக்கும் 
  • சர்வததோஷ அஞ்சனம் மை - சர்வ தோஷங்களும் நீங்கும்.
  • அஞ்சன மை அரைக்கும் போது மந்திரம் ஜெபித்துக்கொண்டே அரைககவேண்டும். ஓரை பார்த்து அரைக்க வேண்டும். அரைப்பவர் மூச்சு சூரிய மூச்சாக இருக்கவேண்டும். அப்போதுதான் மை சக்தி பெறும்.


உயர்நிலை மாந்திரீக பயிற்சி


சித்தர்கள் வழி தெய்வீக மாந்திரீக மூலிகை,மை வித்தை மந்திர சூட்சம பயிற்சி ,ஜோதிஷ மாந்திரீக பூசாரிகள், மற்றும் ஆன்மிக அன்பர்கள் இக்கலையை ஆண் ,பெண் இருபாலாரும் முன் அனுபவம் இல்லாதவர்களும் எளிய முறையில் பயிற்சி பெற்று பலன் பெறலாம் 
  1. அஷ்டகணபதியின் அருளால் இடையூறுகள் அகல விநாயகர் யந்திர மந்திர பிரயோகம் 
  2. அனைத்து கண் திருஷ்டி தேங்காய் சகல காரியம் தடைபடும் பார்வை தோஷம் அகல கண்திருஷ்டி மந்திர யந்திரம் திருஷ்டி தேங்காய் வாசலில் கட்டும் பூஜை முறை 
  3. செய்வினை,துர்சக்தி,மரண பயம் அண்டாதிருக்க சக்தியான திரியம்பக ஸ்ரீ மிருத்யுஞ்சய முறை.
  4. கல்வியில்,கல்வித்துறை தொழிலில் வெற்றி பெற சிறக்க ஸ்ரீ பிரம்மாஹி யந்திர மந்திர முறை 
  5. பகைவரும் நண்பனாக,பகை விலக ஸ்ரீ கௌமாரி தேவி மஹா யந்திர மந்திர பூஜை முறை 
  6. சகல செல்வங்களும், அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ கணேச ஸித்தி லட்சுமி யந்திர பூஜை முறை 
  7. திருமண தடை,தோஷம் விலக இந்திராணி தேவி பூஜை முறை 
  8. சித்துக்கள் கை வர யந்திர மந்திர பூஜை முறை 
  9. நம் சொல்லுக்கு பிறர் கட்டுப்பட யந்திர மந்திர பிரயோகம் 
  10. வாஸ்து கோளாறு எதிர் குத்து மனை,கோவில் நேர் எதிர் மனை, வாசல்களுக்கு பரிகாரம்,வாசலில் சங்கு அமைக்கும் முகூர்த்த முறை சுலோகம்,விளக்கம் பரிகாரம் 
  11. துர்  ஆவி,சூனிய,ஏவல்,செய்வினை பாதிப்பு விலக முலிகை தீபம்,மூலிகை தூப பிரயோகம் 
  12. செய்வினை பாதிப்பு,ஏவல்,பிரயோகத்தால் ஏற்பட்ட புத்திபெதலித்தல்,மனபாதிப்பு,உடல் பாதிப்பு சரி செய்யும் மூலிகை சாறால் குணப்படுத்தும் பிரயோக முறை 
  13. பேய்,பிசாசு,மோகினி,பிரம்ம rராட்சத,பூத கணங்கள் விளக்கம்,அதன் குனசதியங்கள்,அதன் அறிகுறிகள் விளக்கம்
  14. நல்ல ஆவிகள்,துர் ஆவிகள் கண்டு கொல்வதெப்படி அறியும் முறை 
  15. இறந்த முன்னோர் ஆவிகளை வரவழைத்து ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் (பிராணாயம கோஷம்) முறை 
  16. மனித உடலில் ஆவிகள்,அமானுஷ்ட சக்திகள் புகும் வழியும்,நம்மை பாதுகாக்கும் முறை 
  17. மாந்திரீகளர்கள்,ஜோதிடர்கள் குறி சொல்ல,ஏவல் விட (இந்து பூதம்) இஸ்லாமிய (ஜின்) வசியம் செய்யும் முறையும்,நமக்கு வசியமாகி வேலை செய்யும் பிரயோக முறை 
  18. ஆவிகளை வசியபடுத்தும் மூலிகை கள்,அதன் பாதிப்பு நம்மை தாக்காமல் பாதுகாக்கும் முறைகள் 
  19. இறந்த பெண் மோகினி மூலம் விரும்பியவரை வசிய பிரயோகம் செய்யும்,அடக்கும் முறை 
  20. நல்ல அமானுஷ்ய சக்தி வாய்ந்த ஆவிகளை வசியபடுத்தி நம் வேலை வாங்கும் பிரயோக முறை 
  21. புதையலை காவல் காக்கும் நல்ல ஆவியா? துர் ஆவியா என கண்டுபிடிக்கும் முறை 
  22. துர்மரண ஆவிகள் பிடித்தவர்களை ஆவிகளை வரவழைத்து பேசி,விரட்டும் முறை 
  23. துரமரண ஆவி பாதிப்பு,செய்வினை,ஏவல் விடும் ஆவி அடக்கி விரட்ட குழி தைல பாரிகார முறை 
  24. பில்லி,சூனிய,ஏவல் விடும் பிரத்தியோகத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு,உடல் வீக்கம்,உடல் எரிச்சல்,தாங்க முடியாத உடல் வலி,தலைவலி நீங்க மூலிகை சாறு பரிகார முறை  


Friday, 24 June 2016

மாந்திரீக பயிற்சி


 வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், பொதுமக்கள், ஜோதிடர்கள், பூசாரிகள், குறிசொல்பவர்கள், ஆன்மீகவாதிகள், மாந்திரீகம் தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்பயிற்ச்சியை முறையாக தெரிந்து, 7 நாளில் இருந்து 21 நாளில் தெய்வசத்தி நம்மிடம் இருப்பதை உணரலாம்.

     நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராஹி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை,கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம். 

 தேவதா சித்தியடைய பூஜை ஜெபமுறை, யந்திரம், மூலிகை, மை, மந்திரமுறைகளும், நெய்வேத்தியம், படையல்,ஹோமம்,பலிமுறைகளும்,தெய்வ தேவதா நம்முடன் தொடர்பு கொள்ளும் முறைகளும்

   நாம் முறையாக சித்தி செய்த தெய்வ தேவதாவின் துணையுடன், நமது துன்பம்,நம்மைச்சார்ந்தோர் துன்பத்தையும்,முறையாக நீக்கும் அஷ்டகர்ம வித்தையாகிய, வசியம், மோகனம், ஆகர்சனம், வித்துவேசனம், ஸ்தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் போன்றவற்றின் செயல் உபயோகம் விளக்கம், பயன்பாடு,  எளிய பிரையோக வித்தைகள், அருள்வாக்கு குறி சொல்லும் முறை, முக்காலம் உணரும் முறைகளும் சித்திசெய்த தேவதையுடன் அடுத்து அதனுடைய பரிவார தேவயையும் நட்புகொள்ளும் முறை, இதன்மூலம் தெய்வ நிலை அடையும் வழிமுறை, மரனமில்லாப்பெருவாழ்வு நிலையுடன் ஞான நிலையும் அத்துடன் நம் ஜீவனை ஒளியாக மாற்றும் வித்தையும் முறையாக போதிக்கப்படும்.
தெய்வ உபாசனை செய்பவர்களை துன்பம், தரித்திரம், கண்திருஷ்டி, செய்வினை, கர்மவினை, கிரக தோசம்,  துஷ்டசக்தி நெருங்காது.
தெய்வ சக்தியால் நம் இல்லம், தொழில், வியாபாரம் செய்யும் இடம்,லாபத்துடன்          விருத்தியடையும்
தெய்வ துணையால் எதிரி, எதிர்ப்பு, போட்டி, பொறாமை, நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏமாற்றுபவர், தொல்லை தருபவர்,முகம் தெரியாத எதிரியும் நமக்கு கேடு நினைப்பவர்களும் அவர்களாக விலகி விடுவார்
வேதரிஷிகளும், சித்தர்களும் நமக்கு அளித்த அபூர்வ கலை
இதுவரை பலருக்கு அனுபவ தேவதா சித்தி பயிற்சி வழங்கி பலன் பெறச் செய்துள்ளோம்
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார். அளித்த அபூர்வ கலை       
 நீங்கள் விரும்பும் தெய்வ, தேவதா சித்தி முறைகள், முறையான பூஜை முறை, மந்திர, யந்திர, தியான முறை, மை முறையில் வர வைத்தல்.

o   யார் உடலுக்கு எந்த தெய்வ, தேவதா சித்தி ஆகும் என்பதை ஜாதகம், நாடி, தேகக் கூறு, வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்து, தேவதா சித்தி பயிற்சி அளிக்கப்படும்
.
o   கணபதி, காளி, வராஹி, பைரவர், மாடன், காட்டேரி, ஜீன், இசக்கி, மோகினி, யட்சினி, யோகினி, டாகினி, சாகுனி, குறளி, குட்டிச்சாத்தான், தூமாதேவி, கருப்பணசாமி, இருளப்பன், அனுமார், பேச்சி, சூலினி, பகவதி, சண்டி, ருத்ரி, சுப்ரமணியர், நாகதேவதை, புவனை, வாலை, திரிபுரை, மனோன்மணி போன்ற தெய்வ சித்தி முறைகள்.

o   கரு, உரு, குரு முறைகள், வாக்கு சித்தி, அருள் வாக்கு பயிற்சிகள், ஜாலபயிற்சிகள், முக்கால குறி சொல்லும் பயிற்சிகள், வெற்றிலை,தேங்காய் குறிமுறை, சோழி பிரசன்ன முறைகள்.

o   முறையான மாந்த்ரீக அஷ்டகர்ம வித்தை, வசியம், மோகனம், ஆகர்ஸனம், வித்துவேசனம், உச்சாடனம், பேதனம், ஸ்தம்பனம், மாரனம் போன்றவை அடிப்படையிலிருந்து பிரயோக முறைகள்.

o   அஷ்டகர்ம பிரயோகம், அஸ்திர பிரயோகம், பார்வை பிரயோகம், பிரம்மாஸ்திர பிரயோகம், கெடர்தள பிரயோகம், கருட பிரயோகம், விருட்ச பிரயோகம், பஞ்சபூத பிரயோக முறைகள், ஆத்ம பிரயோகம் போன்ற பிரயோக முறைகள்.

o   மந்திர பிரம்பு, யந்திரம், தாயத்து, எலுமிச்சம்பழம், தேங்காய், முட்டை, தண்ணீர், பூ, குங்குமம், போன்றவை மந்திரித்து உயிர் உண்டாக்கி பயன்படுத்துவது.

o   யாகத்தின் மூலம் தெய்வ, தேவதைக்கு உணவளித்தல், தெய்வ, தேவதை, ஆவிகளை உடம்பில் இறக்கும் முறைகள், பேய் ஓட்டும் முறைகள்.

o   கிரக தோசம், ஏவல் தோசம், தரித்திர தோசம், மாங்கல்ய தோசம், பித்ரு தோசம், பூர்வ புண்ணிய கர்மம், சகல தோசம் நிவர்த்தி முறை, கழிப்பு கழிக்கும் முறை, செய்வினை, ஏவல் அகற்றும் முறைகள்.

o   பஞ்சபட்சி, சரம், ஓரை நாளறியும் விதம்.

o   மூலிகை, புல்லுருவி முறையாக சர்வ நிவர்த்தி, காப்பு கட்டுதல், உயிர் உண்டாக்கி பயன்படுத்தும் முறைகள்.

o   பறவை அஞ்சனம், பாதாள அஞ்சனம், குறி அஞ்சனம், அஷ்டகர்ம அஞ்சனம், சைவ அசைவ முறை, அரைத்து உயிர் உண்டாக்கி பயன்படுத்தும் முறைகள்.

o   இங்கு கலை அழியாமல் பாதுகாக்கவும், தகுதியானவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது.