Friday 24 June 2016

மாந்திரீக பயிற்சி


 வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், பொதுமக்கள், ஜோதிடர்கள், பூசாரிகள், குறிசொல்பவர்கள், ஆன்மீகவாதிகள், மாந்திரீகம் தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்பயிற்ச்சியை முறையாக தெரிந்து, 7 நாளில் இருந்து 21 நாளில் தெய்வசத்தி நம்மிடம் இருப்பதை உணரலாம்.

     நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராஹி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை,கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம். 

 தேவதா சித்தியடைய பூஜை ஜெபமுறை, யந்திரம், மூலிகை, மை, மந்திரமுறைகளும், நெய்வேத்தியம், படையல்,ஹோமம்,பலிமுறைகளும்,தெய்வ தேவதா நம்முடன் தொடர்பு கொள்ளும் முறைகளும்

   நாம் முறையாக சித்தி செய்த தெய்வ தேவதாவின் துணையுடன், நமது துன்பம்,நம்மைச்சார்ந்தோர் துன்பத்தையும்,முறையாக நீக்கும் அஷ்டகர்ம வித்தையாகிய, வசியம், மோகனம், ஆகர்சனம், வித்துவேசனம், ஸ்தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் போன்றவற்றின் செயல் உபயோகம் விளக்கம், பயன்பாடு,  எளிய பிரையோக வித்தைகள், அருள்வாக்கு குறி சொல்லும் முறை, முக்காலம் உணரும் முறைகளும் சித்திசெய்த தேவதையுடன் அடுத்து அதனுடைய பரிவார தேவயையும் நட்புகொள்ளும் முறை, இதன்மூலம் தெய்வ நிலை அடையும் வழிமுறை, மரனமில்லாப்பெருவாழ்வு நிலையுடன் ஞான நிலையும் அத்துடன் நம் ஜீவனை ஒளியாக மாற்றும் வித்தையும் முறையாக போதிக்கப்படும்.
தெய்வ உபாசனை செய்பவர்களை துன்பம், தரித்திரம், கண்திருஷ்டி, செய்வினை, கர்மவினை, கிரக தோசம்,  துஷ்டசக்தி நெருங்காது.
தெய்வ சக்தியால் நம் இல்லம், தொழில், வியாபாரம் செய்யும் இடம்,லாபத்துடன்          விருத்தியடையும்
தெய்வ துணையால் எதிரி, எதிர்ப்பு, போட்டி, பொறாமை, நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏமாற்றுபவர், தொல்லை தருபவர்,முகம் தெரியாத எதிரியும் நமக்கு கேடு நினைப்பவர்களும் அவர்களாக விலகி விடுவார்
வேதரிஷிகளும், சித்தர்களும் நமக்கு அளித்த அபூர்வ கலை
இதுவரை பலருக்கு அனுபவ தேவதா சித்தி பயிற்சி வழங்கி பலன் பெறச் செய்துள்ளோம்
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார். அளித்த அபூர்வ கலை       
 நீங்கள் விரும்பும் தெய்வ, தேவதா சித்தி முறைகள், முறையான பூஜை முறை, மந்திர, யந்திர, தியான முறை, மை முறையில் வர வைத்தல்.

o   யார் உடலுக்கு எந்த தெய்வ, தேவதா சித்தி ஆகும் என்பதை ஜாதகம், நாடி, தேகக் கூறு, வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்து, தேவதா சித்தி பயிற்சி அளிக்கப்படும்
.
o   கணபதி, காளி, வராஹி, பைரவர், மாடன், காட்டேரி, ஜீன், இசக்கி, மோகினி, யட்சினி, யோகினி, டாகினி, சாகுனி, குறளி, குட்டிச்சாத்தான், தூமாதேவி, கருப்பணசாமி, இருளப்பன், அனுமார், பேச்சி, சூலினி, பகவதி, சண்டி, ருத்ரி, சுப்ரமணியர், நாகதேவதை, புவனை, வாலை, திரிபுரை, மனோன்மணி போன்ற தெய்வ சித்தி முறைகள்.

o   கரு, உரு, குரு முறைகள், வாக்கு சித்தி, அருள் வாக்கு பயிற்சிகள், ஜாலபயிற்சிகள், முக்கால குறி சொல்லும் பயிற்சிகள், வெற்றிலை,தேங்காய் குறிமுறை, சோழி பிரசன்ன முறைகள்.

o   முறையான மாந்த்ரீக அஷ்டகர்ம வித்தை, வசியம், மோகனம், ஆகர்ஸனம், வித்துவேசனம், உச்சாடனம், பேதனம், ஸ்தம்பனம், மாரனம் போன்றவை அடிப்படையிலிருந்து பிரயோக முறைகள்.

o   அஷ்டகர்ம பிரயோகம், அஸ்திர பிரயோகம், பார்வை பிரயோகம், பிரம்மாஸ்திர பிரயோகம், கெடர்தள பிரயோகம், கருட பிரயோகம், விருட்ச பிரயோகம், பஞ்சபூத பிரயோக முறைகள், ஆத்ம பிரயோகம் போன்ற பிரயோக முறைகள்.

o   மந்திர பிரம்பு, யந்திரம், தாயத்து, எலுமிச்சம்பழம், தேங்காய், முட்டை, தண்ணீர், பூ, குங்குமம், போன்றவை மந்திரித்து உயிர் உண்டாக்கி பயன்படுத்துவது.

o   யாகத்தின் மூலம் தெய்வ, தேவதைக்கு உணவளித்தல், தெய்வ, தேவதை, ஆவிகளை உடம்பில் இறக்கும் முறைகள், பேய் ஓட்டும் முறைகள்.

o   கிரக தோசம், ஏவல் தோசம், தரித்திர தோசம், மாங்கல்ய தோசம், பித்ரு தோசம், பூர்வ புண்ணிய கர்மம், சகல தோசம் நிவர்த்தி முறை, கழிப்பு கழிக்கும் முறை, செய்வினை, ஏவல் அகற்றும் முறைகள்.

o   பஞ்சபட்சி, சரம், ஓரை நாளறியும் விதம்.

o   மூலிகை, புல்லுருவி முறையாக சர்வ நிவர்த்தி, காப்பு கட்டுதல், உயிர் உண்டாக்கி பயன்படுத்தும் முறைகள்.

o   பறவை அஞ்சனம், பாதாள அஞ்சனம், குறி அஞ்சனம், அஷ்டகர்ம அஞ்சனம், சைவ அசைவ முறை, அரைத்து உயிர் உண்டாக்கி பயன்படுத்தும் முறைகள்.

o   இங்கு கலை அழியாமல் பாதுகாக்கவும், தகுதியானவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது.

7 comments:

  1. ஓம் குருவடி சரணம்

    ReplyDelete
  2. தங்களுடைய முகவரி தேவை

    ReplyDelete
  3. தங்களுடைய முகவரி தேவை

    ReplyDelete
  4. Thank you for your information. Shall i learn this manthiram ? Please.

    ReplyDelete